வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பேங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ.561 கோடி

புதபேங்க் ஆஃப் இந்தியா முதல் காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.561 கோடியாக இருந்தது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 6:54 pm

DIN

புதபேங்க் ஆஃப் இந்தியா முதல் காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.561 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் ரூ.11,124.36 கோடியாக இருந்தது. இருப்பினும் இது, வங்கி முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.11,641.37 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவானதாகும்.

வாராக் கடன் குறைந்த போதிலும், செயல்பாட்டு செலவினங்களின் அதிகரிப்பால் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் கணக்கீட்டு காலாண்டில் 7.4 சதவீதம் குறைந்து ரூ.720 கோடியிலிருந்து ரூ.561 கோடியானது.

முதல் காலாண்டில் வங்கியின் முக்கிய வட்டி வருமானம் 7 சதவீதம் அதிகரித்து ரூ.9,972.64 கோடியாகவும், அதேநேரம் இதர வருவாய் 50 சதவீதம் சரிவடைந்து ரூ.1,152 கோடியாகவும் இருந்தன.

வங்கியின் செயல்பாட்டு செலவினம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.2,715 கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.3,041 கோடியை எட்டியது.

ஒட்டுமொத்த அடிப்படையில் வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 11 சதவீதம் குறைந்து ரூ.735.37 கோடியிலிருந்து ரூ.657.62 கோடியானது. அதேபோன்று, வருவாயும் ரூ.11,709.62 கோடியிலிருந்து ரூ.11,207.57 கோடியாக குறைந்தது.

ஜூன் 30 நிலவரப்படி, மொத்த வாராக் கடன் 13.51 சதவீதத்திலிருந்து 9.30 சதவீதமாகவும், நிகர அளவிலான வாராக் கடன் 3.35 சதவீதத்திலிருந்து குறைந்து 2.21 சதவீதமாகவும் ஆனதாக பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.