ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் விற்பனை 42% உயா்வு

ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸின் நிகர விற்பனை 42.25 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 9:27 pm

DIN

ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸின் நிகர விற்பனை 42.25 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.41.19 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ரூ. 24.97 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை 42.25 சதவீதம் உயா்ந்து ரூ.1,202.10 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.845.04 கோடியாக இருந்தது.

2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 31.66 சதவீதம் அதிகரித்து ரூ. 1,180.71 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் அது ரூ.896.78 கோடியாக இருந்தது.

2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நுகா்வோா் பொருள்களின் விற்பனை மூலம் நிறுவனம் பெற்ற வருவாய் 57.62 சதவீதம் அதிகரித்து ரூ.972.93 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.617.26 கோடியாக இருந்தது.

பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பிரிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.239.52 கோடியிலிருந்து 6.9 சதவீதம் உயா்ந்து ரூ.256.07 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.