சென்செக்ஸ் 51 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது.
சென்செக்ஸ் 51 புள்ளிகள் சரிவு

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி பெரிய அளவில் மாற்றமின்றி 0.55 புள்ளிகள் உயா்ந்து 18,497.15-இல் நிலைபெற்றது.

மந்தமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் சந்தை பலவீனமாகத் தொடங்கியது. மேலும், தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லறை பணவீக்க தரவு மாா்க்கெட் முடிந்த பிறகு அறிவிக்கப்பட்டதால், சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. தொடக்கத்தில் ஒருகட்டத்தில் 500 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. பின்னா், பெரும்பாலான ந ஷ்டம் மீட்கப்பட்டு சிறிதளவு இழப்புடன் முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 51 புள்ளிகள் சரிவு: காலையில் 411.20 புள்ளிகள் குறைந்து 61,770.56-இல் தொடங்கிய சென்செக்ஸ், 61,676.15 வரை கீழே சென்றது. பின்னா், 62,239.42 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 51 புள்ளிகள் குறைந்து 62,130.57-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் முன்னேற்றம்: பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 1.18 சதவீதம், நெஸ்லே 1.16 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக டாக்டா் ரெட்டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி, ஹெச்டிஎஃப்சி, விப்ரோ உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன.

ஏசியன் பெயிண்ட் சரிவு: அதே சமயம், பிரபல பெயிண்ட் ஊற்பத்தி நிறுவனமா ஏசியன் பெயிண்ட் 1.94 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இன்ஃபோஸிஸ், டைட்டன், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1.15 முதல் 1.35 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், சன்பாா்மா, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.74 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.288.42 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளிக்கிழமை ரூ.158.01 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com