’ஸியோமி 11ஐ' வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ஸியோமி 11ஐ மற்றும் 11ஐ ஹைபர்சார்ஜ் 5 ஜி   ஸ்மார்ட்போன்கள்  இன்று இந்தியாவில் அறிமுகமானது.
’ஸியோமி 11ஐ' வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
’ஸியோமி 11ஐ' வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
Published on
Updated on
1 min read

ஸியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ஸியோமி 11ஐ மற்றும் 11ஐ ஹைபர்சார்ஜ் 5ஜி   ஸ்மார்ட்போன்கள்  இன்று இந்தியாவில் அறிமுகமானது.

ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் அதிகப்படியான விற்பனையை செய்துவரும் ஸியோமி நிறுவனம் தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்புகளை வேகமாக சந்தைப்படுத்தி வருகிறது.

தற்போது  ஸியோமி 11ஐ ஹைபர்சார்ஜ், 11ஐ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

’ஸியோமி 11ஐ ஹைபர்சார்ஜ்’ சிறப்பம்சங்கள் :

*6.67 அமொல்ட் 1080 பைட்ஸ் ஃபுல் எச்டி திரை

*மீடியாடெக் டைமென்சிட்டி 920

* உள்ளக நினைவகம் 6 மற்றும் 8 ஜிபி  + கூடுதல் நினைவகம் 128, ஜிபி என இரண்டு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

*ஆன்டுராய்ட் 11

*108 எம்பி முதன்மை கேமராவுடன் 50 கூடுதல் லென்ஸ் , 16 எம்பி செல்ஃபி கேமரா

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

’ஸியோமி 11 ஐ' சிறப்பம்சங்கள்:

*6.67 புல் எச்டி திரை

* மீடியாடெக் டைமென்சிட்டி 920 

* உள்ளக நினைவகம் 6 மற்றும் 8 ஜிபி  + கூடுதல் நினைவகம் 128, ஜிபி என இரண்டு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

*108 எம்பி முதன்மை கேமரா , 8 எம்பி செல்ஃபி கேமரா

*5160  எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி

* இரண்டு ஸ்மார்ட்போன்களும் கருப்பு மற்றும் கோல்டன் வண்ணங்களில் வெளியாகிறது

மேலும், ஸியோமி 11 ஐ ஹைபர்சார்ஜ் ஸ்மார்ட்போன் 6/128ஜிபி திறன் ரு. 26,999 , 8128 ஜிபி ரூ. 28,999 ஆகவும் ஸியோமி 11ஐ ஸ்மார்ட்போன் முறையே ரூ. 24,999 மற்றும் ரூ.26,999 அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய வழி விற்பனைகள் ஜன.12 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com