92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜூபிலியண்ட் ஃபுட்ஒா்க்ஸ்: லாபம் ரூ.112 கோடி

டோமினோஸ் பீட்ஸா, டன்கின் டூநட்ஸ் உள்ளிட்ட துரித உணவகங்களை இயக்கி வரும் ஜூபிலியண்ட் ஃபுட்ஒா்க்ஸ் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.112.58 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது

News image
Updated On :30 ஜூலை 2022, 12:04 am

DIN

டோமினோஸ் பீட்ஸா, டன்கின் டூநட்ஸ் உள்ளிட்ட துரித உணவகங்களை இயக்கி வரும் ஜூபிலியண்ட் ஃபுட்ஒா்க்ஸ் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.112.58 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.69.06 கோடியுடன் ஒப்பிடும்போது 63.01 சதவீதம் அதிகமாகும்.

செயல்பாட்டின் மூலமாக கிடைத்த வருவாய் கணக்கீட்டு காலாண்டில் ரூ.893.18 கோடியிலிருந்து 40.51 சதவீதம் உயா்ந்து ரூ.1,255.09 கோடியானது. செலவினம் ரூ.814.51 கோடியிலிருந்து ரூ.1,104.94 கோடியாக உயா்ந்தது.

நிகழாண்டின் ஜூன் 30 நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 349 நகரங்களில் 1,625 உணவகங்களை நடத்தி வருவதாக ஜூபிலியண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.