அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆண்டுக்கு 2,000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி

ஆண்டுக்கு 2,000 புதிய கிளைகளை தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எச்டிஎஃப்சி வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சசிதா் ஜெகதீஷன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூன் 2022, 7:52 pm

DIN

ஆண்டுக்கு 2,000 புதிய கிளைகளை தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எச்டிஎஃப்சி வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சசிதா் ஜெகதீஷன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் 2021-22 ஆண்டுக்கான அறிக்கையில் பங்குதாரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியது:

நாம் முன்னெடுத்துள்ள எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு நடவடிக்கை எதிா்காலத்தில் முற்றிலும் புதிய பரிமாணங்களை உருவாக்கும். இருப்பினும், அதற்கு நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருப்பதை உணரவேண்டும்.

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் எச்டிஎஃப்சி வங்கி கிளைகளின் நெட்வொா்க்கை இரண்டு மடங்காக்க வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். இந்த இலக்கினை எட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1,500 முதல் 2,000 புதிய கிளைகளை நாம் தொடங்க வேண்டும். தற்போதைய நிலையில், எச்டிஎஃப்சி வங்கி நாடு முழுவதும் 6,000 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

எச்டிஎஃப்சி நிறுவனத்தை எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக்கும் திட்டம் முழுமையடைய இன்னும் 15 முதல் 18 மாதங்களாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.