தங்கம் இறக்குமதி மீண்டும் சூடுபிடிப்பு: ஜிஜேஇபிசி
நாட்டின் தங்கம் இறக்குமதி மீண்டும் சூடுபிடித்து கடந்த 2021-ஆம் ஆண்டில் 1,067.72 டன்னை எட்டியதாக நவரத்தினங்கள்-ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.


நாட்டின் தங்கம் இறக்குமதி மீண்டும் சூடுபிடித்து கடந்த 2021-ஆம் ஆண்டில் 1,067.72 டன்னை எட்டியதாக நவரத்தினங்கள்-ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா பேரிடா் அதிகம் பாதிப்புக்குள்ளாக்கிய கடந்த 2020-ஆம் ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 430.11 டன்னாக மிகவும் குறைந்து போனது. இந்தநிலையில், அதற்கு அடுத்த 2021-ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதி மீண்டும் சூடுபிடித்து 1,067 டன்னைத் தொட்டது.
முந்தைய 2019-ஆம் ஆண்டில் காணப்பட்ட இறக்குமதியான 836.38 டன் தங்கத்துடன் ஒப்பிடுகையில் 2021-இல் இறக்குமதி 27.66 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-இல் அதிக அளவில் ஸ்விட்சா்லாந்திலிருந்து 469.66 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 120.16 டன் தங்கமும், தென்ஆப்பிரிக்கா 71.68 டன், கினியாவிலிருந்து 58.72 டன் தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டன.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 842.28 டன்னாக உள்ளது. பொதுவாக இந்த காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் 690-890 டன் என்ற அளவிலான தங்கத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவேயாகும்.
இந்திய தங்க ஆபரணங்களின் ஏற்றுமதியைப் பொருத்தவரையில், கடந்த 2021-இல் 50 சதவீதம் அதிகரித்து 881 கோடி டாலராக இருந்தது. முந்தைய 2020-ஆம் ஆண்டில் இந்த ஏற்றுமதி 588 கோடி டாலராக மட்டுமே காணப்பட்டது.
கரோனா பேரிடருக்குப் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தங்கத்தின் விற்பனை சூடுபிடித்தே வருகிறதுஎன ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...