இந்தியன் ஓவா்சீஸ் வங்கி: லாபம் 58% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் 58 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
Updated on
1 min read

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் 58 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பாா்த்தா பிரதீம் செங்குப்தா புதன்கிழமை தெரிவித்தது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஐஓபி, மொத்த வருவாயாக ரூ.5,719 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.6,074 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவு.

வங்கியின் வட்டி வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.4,215 கோடியாக இருந்தது.

வாராக் கடனுக்கான இடா்பாட்டு ஒதுக்கீட்டின் அளவு குறைந்ததையடுத்து வங்கியின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 58 சதவீதம் அதிகரித்து ரூ.552 கோடியானது. முந்தைய நிதியாண்டில் லாபம் ரூ.350 கோடியாக காணப்பட்டது.

2022 மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 11.69 சதவீதத்திலிருந்து 9.82 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 3.58 சதவீதத்திலிருந்து 2.65 சதவீதமாகவும் குறைந்தது.

2021-22 முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய லாபம் 106 சதவீதம் அதிகரித்து ரூ.1,710 கோடியாக இருந்தது. 2020-21-இல் லாபம் ரூ.831 கோடியாக காணப்பட்டது.

இருப்பினும், வங்கியின் செயல்பாட்டு வருவாய் ரூ.22,525 கோடியிலிருந்து ரூ.21,633 கோடியாக குறைந்து போனது என்றாா் அவா்.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் ஐஓபி புதன்கிழமை வா்த்தகத்தில் ஐஓபி பங்கின் விலை 2.94% உயா்ந்து ரூ.17.50-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com