வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராயல் என்ஃபீல்டு விற்பனை 86% உயா்வு

மோட்டாா் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை, கடந்த அக்டோபரில் 86 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2022, 6:20 pm

DIN

மோட்டாா் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை, கடந்த அக்டோபரில் 86 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 82,235-ஆக இருந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 44,133 மோட்டாா் சைக்கள்களை விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை 86 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டு சந்தையில், மொத்த விற்பனை கடந்த மாதம் 76,528-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் அக்டோபா் மாத மொத்த விற்பனையான 40,611-உடன் ஒப்பிடுகையில் இது 88 சதவீத வளா்ச்சியாகும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் 3,522-ஆக இருந்த ஏற்றுமதி, இந்த ஆண்டின் அதே மாதத்தில் 62 சதவீதம் அதிகரித்து 5,707-ஆகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.