வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

2 நாள் சரிவுக்குப் பிறகு ஏற்றம்: சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்வு

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:27 pm

 நமது நிருபர்

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 64.45 புள்ளிகள் (0.36 சதவீதம்) உயா்ந்து 18,117.15-இல் முடிவடைந்தது.

ஆசியா, ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக அமைந்திருந்திருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த சில நாள்களாக பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவதும் முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கையை வரவழைத்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

114 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 138.14 புள்ளிகள் குறைந்து 60,698.27-இல் தொடங்கி 60,666.01 வரைகீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 61,004.49 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 113.95 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயா்ந்து 60,950.36-இல் முடிவடைந்தது.

பஜாஜ் ஃபின் சா்வ் முன்னேற்றம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. . இதில் பிரபல தனியாா் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ் 4.55 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல் 2.50 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.45 சதவீதம் உயா்ந்தன. மேலும், எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன.

டாக்டா் ரெட்டி சரிவு: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டா் ரெட்டி 1.49 சதவீதம், இன்ஃபோஸிஸ் 1.08 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் 1.03 சதவீதம் குறைந்து குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, பவா் கிரிட், எச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, சன்பாா்மா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு குறைந்து விலை குறைந்த பட்டியலில் வந்தன.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.42 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.2 83.00 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழக்கிழமை ரூ.677.62 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.