புதுதில்லி: ஸ்டீல் அதோரிட்டி ஆஃப் இந்தியா லிமிட்டெட், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து முறையே சுமார் ரூ.604 கோடி, ரூ.450 கோடி மற்றும் ரூ.37 கோடியை மத்திய அரசு ஈவுத்தொகையாகப் பெற்றுள்ளதாக, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
இது தவிர, ஐஆர்சிடிசி மற்றும் பாரதிய ரெயில் பிஜ்லீ கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து முறையே ரூ.81 கோடி மற்றும் ரூ.31 கோடியை ஈவுத்தொகையாக அரசு பெற்றுள்ளது என்று ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை திரும்பப் பெறுதல், பங்குகளில் மத்திய அரசின் முதலீடுகளை நிர்வகித்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் கையாள்கிறது, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை. அதன் பணியின் நான்கு முக்கியப் பகுதிகளான மூலோபாய முதலீட்டை விலக்குதல், சிறுபான்மை பங்கு விற்பனை, சொத்து பணமாக்குதல் மற்றும் மூலதன மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆஃபர் ஃபார் சேல் அல்லது பிரைவேட் பிளேஸ்மென்ட் அல்லது வேறு ஏதேனும் முறை மூலம் மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அனைத்து விஷயங்களையும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை கையாள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


