இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

நாள்தோறும் வரலாறு காணாத என்ற வார்த்தையுடன் தொடங்கி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாள்தோறும் வரலாறு காணாத என்ற வார்த்தையுடன் தொடங்கி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது.

அதுபோல, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையும் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 38 காசுகள் சரிந்து ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.68 ஆக சரிந்துள்ளது.

இந்தியா அண்மையில் எந்தத் துறையில் புதிய வரலாறுகளைப் படைக்கிறதோ இல்லையோ, இந்திய ரூபாயின் மதிப்பு மட்டும் நாள்தோறும் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு 82.3 ஆக சரிந்தது. வெள்ளிக்கிழமையும் 13 காசுகள் சரிந்து வணிகமானது. இந்த நிலையில், திங்கள்கிழமை வர்த்தகத்தின் போது 38 காசுகள் சரிந்து 82.68ஆக சரிந்துள்ளது. 

அமெரிக்க டாலரின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்திருப்பதே இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகப்படியான பணத்தை இறக்குமதி நிறுவனங்கள் செலவிட நேரிடும். இதனால் செல்லிடப்பேசி உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com