3 நாள் தொடர் சரிவுக்கு முடிவு: சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வு

கடந்த மூன்று தினங்களாக வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை நேர்மறையாக முடிவடைந்தது.
3 நாள் தொடர் சரிவுக்கு முடிவு: சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வு
Updated on
1 min read

கடந்த மூன்று தினங்களாக வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 479 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 140.05
 புள்ளிகள் (0.82 சதவீதம்) உயர்ந்து 17,123.60-இல் முடிவடைந்தது.
 அமெரிக்க சந்தை குறிப்புகள் செவ்வாய்க்கிழமை கலவையாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கினாலும், பின்னர் தள்ளாட்டத்தில் இருந்தது. இந்த நிலையில், ஐரோப்பியா மற்றும் ஆசிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்தது. இதையடுத்து, வங்கி, ஐடி, மின்துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், உள்நாட்டு சந்தை நேர்மறையாக முடிவடைந்தது.
 479 புள்ளிகள் உயர்வு:
 சென்செக்ஸ் காலையில் 165.17 புள்ளிகள் கூடுதலுடன் 57,312.49-இல் தொடங்கி, 57,085.92 வரை கீழே சென்றது. பின்னர், வர்த்தகம் சூடுபிடித்ததைத் தொடர்ந்து, அதிகபட்சமாக 57,687.64 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 478.59 புள்ளிகள் (0.84 சதவீதம்) உயர்ந்து 57625.91-இல் முடிவடைந்தது. காலையில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் எதிர்மறையாகச் சென்றது.
 25 பங்குகள் முன்னேற்றம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயிண்ட், டாக்டர் ரெட்டி, பார்தி ஏர்டெல், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய 5 பங்குகள் மட்டுமே 1.60 முதல் 0.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மற்ற 25 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், பவர் கிரிட் 3.50 சதவீதம் ,ஆக்ஸிஸ் பேங்க் 2.89 சதவீதம், என்டிபிசி 2.442 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனி லீவர், எம் அண்ட் எம், நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஐடிசி, பஜாஜ் ஃபின் சர்வ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை உயர்ந்தன. புள்ளிகள் அடிப்படையில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க்,
 இன்ஃபோஸிஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.53 லட்சம் கோடிஉயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.271.64 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாயன்று ரூ.4,612.67 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com