விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆப்பிள் ஐபோன்களில் 5ஜி அப்டேட் எப்போது?

ஐபோன் பயனர்கள் வருகிற டிசம்பர் மாதம் 5ஜி மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பெறுவார்கள் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 10:56 am

ஐபோன் பயனர்கள் வருகிற டிசம்பர் மாதம் 5ஜி மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பெறுவார்கள் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடக்கிவைத்தார். ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் 5ஜி-யை ஏலத்தில் எடுத்துள்ளன. இதன்படி மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு விரைவில் 5ஜி மென்பொருள் சேவையை தரவுள்ளது. 

வருகிற டிசம்பர் மாதம் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE (third generation) மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் 5ஜி மென்பொருள் அப்டேட்டை பெறுவார்கள் என்றும் படிப்படியாக மற்ற மாடல் போன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளை முக்கிய பெருநகரங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.