
பிஒய்டி வாகன உற்பத்தி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அட்டோ 3 மின்சாரக் காரின் முன்பதிவு துவங்கியுள்ளது.
வாகன எரிவாயுவின் பயன்பாடுகளைக் குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் படியான வாகனத்தை பல நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றன.
தற்போது, அடுத்தகட்டமாக மின்சாரத்தில் இயங்கும் கார்களையும் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் வளர்ந்து வரும் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி நேற்று மின்சாரத்தில் இயங்கும் அட்டோ 3 வகை காரின் விற்பனை முன்பதிவை துவங்கியது.
இதையும் படிக்க: தமிழகத்தில் 2வது ஆலையைத் திறந்தது பாரதி சிமெண்ட்
மின்சாரத்தில் இயங்கும் அட்டோ 3 காரினை முழுமையாக சார்ஜ் செய்தால் 521 கி.மீ வரை பயணிக்கலாம்.மேலும், இந்தக் காரில் 7 ஏர் பேக்கள், 60.48 கிலோ வாட் பேட்டரி, 360 டிகிரி வியூ மானிடர் உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.
இதன் முன்பதிவு தொகை ரூ.50.000 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். 2023 ஜனவரிக்குள் முதல் 500 கார்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அந்நிறுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணிக்கும் வகையிலான ‘அவின்யா’ என்கிற மின்சாரக் காரை வருகிற 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவருவோம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.