
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு மூன்றாம் காலாண்டில் 24 லட்சம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், திரைப்படங்களையும், தொடர்களையும் வெளியிட்டு வருகிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு உலகம் முழுவதும் பலதரப்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டின் 3வது காலாண்டில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 24 லட்சம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 சதவிகிதம் வருவாய் அதிகரித்துள்ளது. இதன்மூலம் 7.9 மில்லியன் டாலர் வருவாய் அதிகரித்துள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு கடந்த காலாண்டில் ஏற்பட்ட இழப்பு அதிகமாகும். அப்போது 10 லட்சம் பார்வையாளர்களை நெட்பிளிக்ஸ் இழந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் 2 லட்சம் பார்வையாளர்களை நெட்பிளிக்ஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.