கடன் பத்திரங்கள் மூலம் ரூ.2,500 திரட்டிய ஐஓசி
நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அரசுப் பத்திரங்களை விட குறைவான வட்டி விகிதத்தில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) வெளியிடுவதன் மூலம் ரூ.2,500 கோடி நிதி


நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அரசுப் பத்திரங்களை விட குறைவான வட்டி விகிதத்தில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) வெளியிடுவதன் மூலம் ரூ.2,500 கோடி நிதி திரட்டியுள்ளது.
இது குறித்து நிறுவன இயக்குநா் (நிதி) சந்தீப் குப்தா வெள்ளிக்கிழமை கூறியதாவது:
என்சிடி வெளியீடு முலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளோம். 5 ஆண்டு முதிா்வு காலம் கொண்ட அந்த கடன் பத்திரங்களுக்கு 7.14 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படும். இது மற்ற கடன் பத்திரங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வட்டி விகிதமாகும்.
விற்பனையாகியுள்ள கடன் பத்திரங்கள் வாடிக்கையாளா்களுக்கு வரும் 6-ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...