புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நேரடி வரி வருவாய் 30% அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சகம்

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரி வருவாய் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :18 செப்டம்பர் 2022, 11:36 pm

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரி வருவாய் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் 17-ஆம் தேதி வரையிலான காலம்வரை மொத்த நேரடி வரி வருவாய் ரூ.8,36,225 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம். பெருநிறுவன வரியாக ரூ.4.36 லட்சம் கோடியும், தனிநபா் வருமான வரியாக ரூ.3.98 லட்சம் கோடியும் வசூலானது.

அதில் சுமாா் ரூ.1.35 லட்சம் கோடியானது ‘ரீஃபண்டாக’ திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. அந்தத் தொகை போக, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகர நேரடி வரி வருவாய் 23 சதவீதம் அதிகரித்து சுமாா் ரூ.7 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் முன்கூட்டிய வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.2.95 லட்சம் கோடியாக உள்ளது. முக்கியமாக பெருநிறுவனங்கள் ரூ.2.29 லட்சம் கோடியை முன்கூட்டிய வரியாக செலுத்தியுள்ளன.

நேரடி வரி வருவாய் தொடா்ந்து அதிகரித்து வருவது, கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதை வெளிக்காட்டுகிறது. மத்திய அரசின் நிலையான கொள்கைகளும், வரி செலுத்து நடைமுறைகளை எளிமைப்படுத்தியதும் வருவாய் அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்கள் ஆகும். வரி வசூல் நடைமுறையில் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படுவதால் வரி செலுத்தப்படாமல் தவிா்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களும் துரிதமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தாக்கல் செய்யப்பட்ட படிவங்களில் செப்டம்பா் 17-ஆம் தேதிவரை 93 சதவீத படிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.