தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்! முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

இன்ஸ்டாகிராம் ஹேக்! தகுந்த நேரத்தில் உதவிய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு

இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதைக் கண்டறிந்த மாணவனுக்கு ரூ.35 லட்சம் பரிசு வழங்கி இன்ஸ்டாகிராம் ஊக்கப்படுத்தியுள்ளது. 

கோப்புப் படம்

Updated On :


இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதைக் கண்டறிந்த மாணவனுக்கு ரூ.35 லட்சம் பரிசு வழங்கி இன்ஸ்டாகிராம் ஊக்கப்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு தலைப்பிடும் வழியில் குளறுபடிகள் (Bug) இருந்ததைக் கண்டறிந்து கூறியதால், இன்ஸ்டாகிராம் நிறுவனம் அந்த மாணவனைப் பாராட்டியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை அம்மாணவர் காத்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவர் நீரஜ் சர்மா. இவர் இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் ரீல்ஸ் விடியோக்களின் தலைப்புகளை மாற்றுவதில் குளறுபடி (Bug) இருப்பதைக் கண்டறிந்தார்.

இதனை இன்ஸ்டாகிராமுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார். இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ நிறுவனமான முகநூல் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மாணவனின் புகார் குறித்து மூன்று நாள்களுக்குப் பிறகு பதில் அளித்தனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் குளறுபடி குறித்து ஆதார விடியோவை அனுப்புமாறு கோரினர். இதனைத் தொடர்ந்து 5 நிமிடங்களில் இன்ஸ்டாகிராம் விடியோவின் தலைப்பை மாற்றிய விடியோவை முகநூல் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் தவறு இருப்பதை முகநூல் நிறுவன மென்பொறியாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் விடியோ பதிவேற்றத்தில் இருந்த தவறை சுட்டிக்காட்டிய மாணவனை பாராட்டும் வகையில் முகநூல் நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.