இன்றைய தொடக்கத்தில் ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் முடிந்துள்ளன.
இன்று(புதன்கிழமை) 59,504.14 என்ற புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் அதிகபட்சமாக காலை 11.20 மணியளவில் 59,799.04 என்ற புள்ளிகளில் வர்த்தமானது. முடிவில் 262.96 புள்ளிகள் குறைந்து 59,456.78 என்ற புள்ளிகளில் முடிந்தன.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 97.90 புள்ளிகள் குறைந்து 17,718.35 புள்ளிகளில் முடிவடைந்துள்ளன.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பவர்கிரிட், இண்டஸ்இண்ட் பேக், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, எல் & டி, ஹெச்.சி.எல்., டிசிஎஸ், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இறக்கம் கண்டன.
இருப்பினும், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்றன.