சூதாட்டத்தை போலவே கிரிப்டோகரன்சிக்கு வரி...தகவல் சொன்ன நிதித்துறை செயலாளர்

கிரிப்டோ சொத்துக்களில் வர்த்தகம் செய்வதை சட்டவிரோதமானதாகக் கருதவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சூதாட்ட பணத்தில் வரி வதிப்பதை போலத்தான் கிரிப்டோ பரிவர்த்தனைகளிலும் வரி விதிக்கப்படவுள்ளது என மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், கிரிப்டோ சொத்துக்களில் வர்த்தகம் செய்வதை சட்டவிரோதமானதாகக் கருதவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் அளித்த பேட்டியில், "இதில், எது சரி? எது தவறு? என்ற வழிமுறைகள் வகுப்படாமல் தெளிவற்ற தன்மை நிலவுகிறது. கிரிப்டோவை வாங்குவதோ விற்பதோ சட்டவிரோதமானது அல்ல.

குதிரைப் பந்தயங்கள் அல்லது பிற சூதாட்டங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை போலவே கிரிப்டோ சொத்துக்களை அணுக வரிவிதிப்பு கட்டமைப்பை நாங்கள் இப்போது அமைத்துள்ளோம். கிரிப்டோவின் எதிர்கால ஒழுங்குமுறைக்கு என்ன நடக்கும் என்பது தொடர்ந்து விவாதமாக உள்ளது. பரந்த அளவில் கலந்தாலோசித்து சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதே அரிசின் தற்போதைய அணுகுமுறையாக உள்ளது.

இப்போதைக்கு, ஒழுங்குமுறைகளை வகுப்பதில் அரசு அவசரம் காட்டாது. ஆனால், இத்தகைய பரிவர்த்தனைகளில் இருந்து ஈட்டப்படும் எந்த வருமானத்திற்கும் வரி விதிக்க வேண்டும்" என்றார்.

கிரிப்டோகரன்ஸிகளை எவ்வாறு கையாள்வது என்பதில் பல ஆண்டுகளாக மத்திய அரசு முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இச்சூழலில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மெய்நிகர் சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவிகித வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து சட்டம் எதவும் வகுக்கப்படாத நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் குழுப்பமே நிலவிவருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com