

சான் பிரான்சிஸ்கோ: கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.
இதையும் படிக்க.. திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?
கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சியால், பயனாளர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து விலகியது.
இதையும் படிக்க.. வெனிசுலாவில் அதன் விலை 60 ஆயிரமாம்: ஏன் என்றால்?
இதையடுத்து ஜூன் 15ஆம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, பல ஆண்டுகாலம் மக்களுக்கு மிகவும் பரிட்சயமாக இருந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கணினியின் பிரவுசர்களில் ஒன்று என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.