சுதந்திர தின விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை காலையில் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தாலும், பின்னர் ஓரளவு மீட்சி பெற்றது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், ஐரோப்பிய சந்தையில் வர்த்தகம் நேர்மறையாக இருந்ததால், உள்நாட்டுச் சந்தை சரிவிலிருந்து ஓரளவு மீண்டது. குறிப்பாக, முன்னணி ஐடி நிறுவமான இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ், மாருதி, எல் அண்ட் டி ஆகியவை வெகுவாக உயர்ந்து சந்தை ஏற்றம் பெற "கை' கொடுத்தது. இதனால், இரண்டாவது நாளாக சந்தை நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.78ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் 304.48 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ. 2,324.23 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 163.25 புள்ளிகள் குறைந்து 65,238.67-இல் தொடங்கிய சென்செக்ஸ் 65,032.89 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 65,605.74 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 137.50 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்ந்து 65,539.42-இல் முடிவடைந்தது.
18 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,075 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 972 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 6 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 65.55 புள்ளிகள் குறைந்து 19,369.00-இல் தொடங்கி, 19,317.20 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,482.75 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 30.45 புள்ளிகள் (0.16 சதவீதம்) கூடுதலுடன் 19,465.00-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
அல்ட்ராடெக் சிமென்ட் 2.43%
என்டிபிசி 2.14%
டாடா மோட்டார்ஸ் 1.92%
இன்ஃபோசிஸ் 1.78%
எம் அண்ட் எம் 1.55%
பவர்கிரிட் 1.37%
சரிவைக் கண்ட பங்குகள்
டாடா ஸ்டீல் 1.90%
பார்தி ஏர்டெல் 1.13%
பஜாஜ் ஃபின்சர்வ் 0.86%
ஆக்ஸிஸ் வங்கி 0.67%
ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் 0.58%
பஜாஜ் ஃபைனான்ஸ் 0.56%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


