

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
நேற்று(வியாழக்கிழமை) 69,521.69 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 69,666.38 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 303.91 புள்ளிகள் உயர்ந்து 69,825.60 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 68.25 புள்ளிகள் உயர்ந்து 20,969.40 புள்ளிகளில் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்சிஎல் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் ஈட்டின.
ஐடிசி, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
முன்னதாக, மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5-ஆவது முறையாக எந்தவித மாற்றமுமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என்று ஆர்பிஐ அறிவித்தது. ஆர்பிஐ நிதிக்கொள்கையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாததால் பங்குச்சந்தை வர்த்தகம் வழக்கம்போல இருந்தது.
இதையும் படிக்க | யுபிஐ செயலி பயன்படுத்துபவரா? ஆர்பிஐ-யின் முக்கிய அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.