பங்குச்சந்தை: புதிய உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்துள்ளதுடன் புதிய சாதனை படைத்துள்ளது. 
பங்குச்சந்தை: புதிய உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்துள்ளதுடன் புதிய சாதனை படைத்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை 69,825.6 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 69,925.63 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

இன்று காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 70,000 புள்ளிகளைக் கடந்தும், நிஃப்டி 21,000 புள்ளிகளைத் தாண்டியும் புதிய உச்சத்தைத் தொட்டன. அதன்படி, சென்செக்ஸ் 70,053.14, நிஃப்டி 21,024.90 என்ற புள்ளிகளில் நிலைபெற்றன.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 102.93 புள்ளிகள் உயர்ந்து 69,928.53 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 27.70 புள்ளிகள் உயர்ந்து 20,997.10 புள்ளிகளில் முடிந்தது. 

நிஃப்டியில் யுபிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசஸ், எல்டிஐ மிண்ட் ட்ரீ ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

அதேநேரத்தில், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், சிப்லா, ஆக்சிஸ் வங்கி, பிபிசிஎல், எம்&எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. 

சென்செக்ஸ் அடிப்படையில், அல்ட்ராடெக் சிமென்ட், நெஸ்லே இந்தியா, பவர்கிரிட், ஹெச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ் ஆகியவை அதிக லாபத்தையும் ஆக்சிஸ் வங்கி, எம்&எம், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாருதி, விப்ரோ ஆகியவை நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com