பங்குச்சந்தை சரிந்தது! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைவு!!

பங்குச்சந்தை இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிந்துள்ளது. 
பங்குச்சந்தை சரிந்தது! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைவு!!

பங்குச்சந்தை இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிந்துள்ளது. 

நேற்று(திங்கள்கிழமை) 69,928.53 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 70,020.68 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 377.50 புள்ளிகள் குறைந்து 69,551.03 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 90.70 புள்ளிகள் குறைந்து 20,906.40 புள்ளிகளில் முடிந்தது.

பிபிசிஎல், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், மாருதி சுஸுகி, சன் பார்மா, ஈச்சர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக நஷ்டமடைந்தன.

அதேநேரம், ஹெச்டிஎஃப்சி லைஃப், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் அடைந்தன.

நேற்று சென்செக்ஸ் 70,000 புள்ளிகளைக் கடந்தும், நிஃப்டி 21,000 புள்ளிகளைத் தாண்டியும் புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com