பங்குச்சந்தை புதிய உச்சம்: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்து புதிய சாதனையையும் படைத்துள்ளது. 
பங்குச்சந்தை புதிய உச்சம்: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்து புதிய சாதனையையும் படைத்துள்ளது. 

நேற்று (வியாழக்கிழமை) 70,514.20 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 70,804.13 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

இன்று பிற்பகல் 3.20 மணியளவில் சென்செக்ஸ் 71.591.59 என்ற அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டது. அதுநேரத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 21.489.65 என்ற புள்ளிகளுடன் புதிய உச்சத்தைத் தொட்டது. 

நேற்றும் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் இரண்டும் புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் இன்று சாதனை படைத்துள்ளன. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 969.55 புள்ளிகள் உயர்ந்து 71,483.75 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல நிஃப்டி 273.95 புள்ளிகள் உயர்ந்து 21,456.65 புள்ளிகளில் முடிந்தது. 

ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டாடா ஸ்டீல், விப்ரோ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் லாபம் ஈட்டின. 

ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com