விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2026-ல் மடிக்கக்கூடிய திரையுடைய மேக்புக்: ஆப்பிள்!

மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய மேக்புக் வகை கணினியை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2023, 2:35 pm

மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய மேக் புக்வகை கணினியை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் பல முன்னணி மின்னணு சாதனங்களைத் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக் கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மேக் புக் எனும் மேம்பட்ட மென்பொருள் உடைய கணினியை 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதில் பல்வேறு அம்சங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டன. 

மென்பொருள் சந்தையில் தற்போது மடிக்கக்கூடிய கணினிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் மடிக்கக்கூடிய மேக் புக்கை தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 

மடிக்கக்கூடிய திரைக்காக சாம்சங் அல்லது எல்ஜி நிறுவனத்துடன் ஆப்பிள் கைக்கோர்க்கவுள்ளது.  ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மேக்புக் 2025ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக 2026ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.