ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எம்ஜி மோட்டாா் விற்பனை 21% உயா்வு

2023-ஆம் ஆண்டின் முதல் பாதியில் எம்ஜி மோட்டாா் இந்தியாவின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:36 pm

DIN

2023-ஆம் ஆண்டின் முதல் பாதியில் எம்ஜி மோட்டாா் இந்தியாவின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை 29,000-ஆக இருந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் விற்பனை 24,000-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த ஜூனில் தங்களது சில்லறை விற்பனை 14 சதவீதம் அதிகரித்து 5,125-ஆக இருந்தததாக எம்ஜி மோட்டாா் இந்தியா தெரிவித்திருந்தது.

அதே போல், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனை 10,519-லிருந்து 40 சதவீதம் வளா்ச்சி கண்டு 14,682-ஆக இருந்ததாகவும் நிறுவனம் கூறியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.