ரெட்மி அறிமுகப்படுத்திய அதிவேக 5 நிமிட சார்ஜர்!

ரெட்மி நிறுவனம் 300W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரெட்மி அறிமுகப்படுத்திய அதிவேக 5 நிமிட சார்ஜர்!

ரெட்மி நிறுவனம் 300W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, ரியல்மீ அதன் 240W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட்டது. இதன் மூலம், ரெட்மியானது ரியல்மீயின் தொழில்நுட்பத்தை விஞ்சியுள்ளது.

உலகின் அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போனான ரியல்மீ GT 3 ஐ அறிமுகப்படுத்தியது. இது சுமார் அதிவேகமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.  

4,100mAh பேட்டரியுடன் கூடிய ரெட்மி நோட் 12 டிஸ்கவரி (எக்ஸ்ப்ளோரர் பதிப்பு) ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டெமோ விடியோவில், ஸ்மார்ட்போன் 50%  வரை சார்ஜ் செய்ய 2 நிமிடங்கள் மற்றும் 11 வினாடிகள் எடுத்தது. முழுமையாக சார்ஜ் செய்ய 5 நிமிடங்களுக்குள் எடுத்தது.

ஆனால், ஒரிஜினல் நோட் 12 டிஸ்கவரி போன் 4,300mAh பேட்டரி கொண்டது. இந்தச் சோதனைக்காக போன் மாற்றியமைக்கப்பட்டது.

ரெட்மி மற்றும் சியோமி ஆகியவை 300W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளிடும் தேதியை அறிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com