ஓபராய் குழுமத் தலைவர் பிரித்வி ராஜ் சிங் ஓபராய் காலமானார்

ஓபராய் குழுமத் தலைவரான பிரித்வி ராஜ் சிங் ஓபராய் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். 
ஓபராய் குழுமத் தலைவர் பிரித்வி ராஜ் சிங் ஓபராய் காலமானார்
Published on
Updated on
1 min read

ஓபராய் குழுமத் தலைவரான பிரித்விராஜ் சிங் ஓபராய்(94 வயது) இன்று (நவம்.14) காலை மரணமடைந்தார்.

பிரித்விராஜ் சிங் ஓபராய் இந்தியாவில் ஹோட்டல் வணிக துறையில் முக்கிய பங்காற்றியவர். சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இவரின் பங்களிப்பை பாராட்டி 2008-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் குடிமக்களுக்கான இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். 

1929-ஆம் ஆண்டு புதுதில்லியில் பிறந்த இவர் மறைந்த ராய் எம்.எஸ்.ஓபராயின் மகனாவார். பிரித்விராஜ் சிங் ஓபராய் இந்தியா, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் கல்வி கற்றார். பின்பு ஓபராய் குழுமத்தின் முதன்மை நிறுவனமான இஐஎச்-ன் செயல்தலைவராக பணியாற்றினார். 

இந்தியாவில் ஹோட்டல் வணிகத்தின் முகத்தை மாற்றியவர் என்று இவர் அழைக்கப்படுகிறார். அகில இந்திய நிர்வாக கூட்டமைப்பினர் இவருக்கு 2013-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர். 

1988-ஆம் ஆண்டு முதல் ஓபராய் குழுமத்தின் தலைவராக பதவி வகித்து வந்த பிரித்விராஜ் சிங் ஓபராய் வயது முதிர்வின் காரணமாக கடந்த 2022 மே மாதம் பதவி விலகினார். இதையடுத்து ஓய்வு எடுத்து வந்த இவர் இன்று காலையில் காலமானார்.

இவரின் இறுதிச்சடங்கு கபஷேரா பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது என ஓபராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com