47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :15 நவம்பர் 2023, 10:31 am

DIN

பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) 64,933.87 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 65,461.54 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 742.06 புள்ளிகள் உயர்ந்து 65,675.93 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 231.90 புள்ளிகள் உயர்ந்து 19,675.45 புள்ளிகளில் முடிந்தது.

ஐடி, நிதித் துறைகளின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 

டிசிஎஸ், எல்&டி, டாடா ஸ்டீல், விப்ரோ, ஐடிசி, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், எம்&எம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

பவர் கிரிட், ஏசியன் பெயிண்ட்ஸ், உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.