ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: மாற்றமின்றி நிலைத்தது சென்செக்ஸ்

பங்குச்சந்தை வியாழக்கிழமை ஆரம்பத்தில் உற்சாகத்துடன் தொடங்கினாலும்,  பின்னர் ஏற்ற, இறக்கத்துடன்
பங்குச்சந்தை
பங்குச்சந்தை
Updated on
1 min read

பங்குச்சந்தை வியாழக்கிழமை ஆரம்பத்தில் உற்சாகத்துடன் தொடங்கினாலும்,  பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.   இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 5 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி ஏற்றம் கண்டது.  ஆனால், உச்சத்தில் லாபப் பதிவு இருந்ததன் காரணமாக சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது.  ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ், மெட்டல், மீடியா பங்குகளுக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. வங்கிப் பங்குகளுக்கு சிறிதளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், ஃபார்மா, ஹெல்த்கேர், ஐடி, நுகர்வோர் சாதன உற்பத்தி நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. 
சந்தை மதிப்பு உயர்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.43 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.328.33 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த புதன்கிழமை ரூ.306.56 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.
சென்செக்ஸ் தள்ளாட்டம்:  காலையில் 61.13 புள்ளிகள் கூடுதலுடன்  66,084.37-இல் தொடங்கிய சென்செக்ஸ்,  அதிகபட்சமாக 66,235.24 வரை மேலே சென்றது. பின்னர்,  65,980.50 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 5.43 புள்ளிகள் (0.01 சதவீதம்)  குறைந்து  66,017.81-இல்  முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,844 பங்குகளில் 2,064  பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,636 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 144 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.  சென்செக்ஸ் பட்டியலில்15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 10 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 16.60 புள்ளிகள் கூடுதலுடன் 19,828.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,875.15 வரை மேலே சென்றது. பின்னர், 19,786.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 9.85 புள்ளிகளை (0.05 சதவீதம்) இழந்து  19.802.00-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,146 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 951 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.   நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 25 பங்குகள் வீழ்ச்சிப்  பட்டியலிலும் இருந்தன.


ஏற்றம் பெற்ற பங்குகள்
இண்டஸ்இண்ட் வங்கி    1.16% 
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்    1.05%
பார்தி ஏர்டெல்    0.96%
ஹெச்டிஎஃப்சி வங்கி    0.62%
விப்ரோ    0.49%
டாடா ஸ்டீல்    0.48%
சரிவைக் கண்ட பங்குகள்
அல்ட்ரா டெக் சிமென்ட்    1.75%
எல் அண்ட் டி    1.11%
பஜாஜ் ஃபைனான்ஸ்    0.71%
டிசிஎஸ்    0.59%
இன்ஃபோசிஸ்    0.55%
என்டிபிசி    0.55%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com