திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் சரிவு

இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.67 சதவீதம் சரிந்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:27 pm

DIN

இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.67 சதவீதம் சரிந்துள்ளது.

அதற்கு முந்தை வாரத்தில் மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் 3 ஆண்டுகள் காணாத புதிய உச்சத்தைத் தொட்டிருந்த நிலையில், அது கடந்த வாரத்தில் குறைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘இக்ரா’வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக மாநிலங்கள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.67 சதவீதமாக உள்ளது.

முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகும். இது, நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் அதிகபட்ச வாராந்திர வட்டி விகிதமாகும்.

செவ்வாய்க்கிழமை நடந்த கடந்த வாரத்துக்கான ஏலத்தில், நாட்டின் 11 மாநிலங்கள் அரசுப் பத்திரங்களை (எஸ்ஜிஎஸ்) வெளியிட்டதன் மூலம் ரூ.11,600 கோடி திரட்டின. இது, அந்த மாநில அரசுகள் ஏற்கெனவே நிா்ணயித்திருந்த இலக்கான ரூ.15,000 கோடியை விட 22 சதவீதம் குறைவாகும்.

கடந்த வார ஏலத்தில் மாநில கடன் பத்திரங்களின் சரசாரி பருவகாலம் 14 ஆண்டுகளில் இருந்து 13 ஆண்டுகளாகக் குறைந்தது.

அத்துடன், மத்திய அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டு கால கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 41 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 40 அடிப்படைப் புள்ளிகளாக அதிகரித்தது.

இந்த நிதியாண்டில் அரசுப் பத்திர வெளியீடு முலம் மாநிலங்கள் இதுவரை ரூ.5,00,500 கோடி திரட்டியுள்ளன. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட 27.9 சவீதம் அதிகமாகும். அப்போது மாநிலங்கள் ரூ.3,91,300 கோடி திரட்டின என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.