சிட்டி யூனியன் வங்கியின் 'ஹலோ யுபிஐ' சேவை அறிமுகம்!

சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப யுபிஐ பணப்பரிமாற்ற சேவைகளில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 
சிட்டி யூனியன் வங்கியின் 'ஹலோ யுபிஐ' சேவை அறிமுகம்!

சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப யுபிஐ பணப்பரிமாற்றத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 757 கிளைகளைக் கொண்டுள்ள சிட்டி யூனியன் வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. 

அந்தவகையில் தற்போது யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதனை மேலும் எளிதாக்கும் பொருட்டு சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

1. 'ஹலோ யுபிஐ' 

மொபைல் போன்களின் மூலமாக செய்யும் பணப்பரிமாற்றத்திற்கு ஐவிஆர் தொழில்நுட்பத்தில்  'யுபிஐ123' என்ற வசதியை வங்கி ஏற்கெனவே அறிமுகம் செய்தது. இந்நிலையில் அடுத்த கண்டுபிடிப்பாக 'ஹலோ யுபிஐ' என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உள்ளூர் மொழிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன்களில் குரல்வழியாகவும் இதனை மேற்கொள்ள முடியும். இது மூத்த குடிமக்களுக்கும் கண்பார்வையற்றவர்களுக்கும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2. யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன்

ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ க்யூ ஆர் கோடு ஸ்கேன் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதியை சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. 800 என்சிஆர் பிராண்டு ஏடிஎம்களில் இந்த வசதி உள்ளது. இதர ஏடிஎம்களிலும் இந்த வசதியை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. 2019ல் இந்த வசதியை முதலில் அறிமுகம் செய்தது சிட்டி யூனியன் வங்கி என்றும் கூறப்பட்டுள்ளது. 

3. அலெக்ஸா

அலெக்ஸா மூலமாக பணப்பரிமாற்றம் செய்யும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக வங்கிக் கணக்கு இருப்பு உள்ளிட்டவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு அலெக்ஸாவில் பதிவு(Register) செய்தால் மட்டுமே போதுமானது. 

4. ஆதார் 

தற்போது ஏடிஎம் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவைக்கு பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்நிலையில் சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியாக, ஏடிஎம் கார்டு இல்லாதவர்கள், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி யுபிஐ சேவைக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com