நோக்கியா நிறுவனத்தில் 14,000 பேருக்கு வேலையிழப்பு!

நிறுவனத்திலுள்ள 86,000 ஊழியர்களின் எண்ணிக்கை 72,000 - 77,000 ஆக குறைக்கப்படும். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


நோக்கியா நிறுவனத்தில் 14 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஃபின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட நோக்கியா நிறுவனம், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது மற்ற நிறுவனங்களுக்கு இணையாக 5ஜி இணைய சேவை கொண்ட ஸ்மார்ட் போன்கள் உற்பத்தியிலும் நோக்கியா களமிறங்கியுள்ளது. 

எனினும் நடப்பாண்டின் 3வது காலாண்டில் 5ஜி உற்பத்தி ஸ்மார்ட்போன்கள் விற்பனை 20% குறைந்துள்ளது. மொத்த வருவாய் 40% குறைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவில் ஆரம்பகட்டத்தில் இருந்த விற்பனை 2022முதல் தேக்கநிலையையே அடைந்துள்ளது. 

இவைகளின் காரணமாக நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையை 16% நோக்கியா நிறுவனம் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால், நிறுவனத்திலுள்ள 86,000 ஊழியர்களின் எண்ணிக்கை 72,000 - 77,000 ஆக குறைக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com