பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகமாயின. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகமாயின. 

கடந்த திங்கள்கிழமை 64,571.88 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) 64,619.27 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 522.82 புள்ளிகள் குறைந்து 64,049.06 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 159.60 புள்ளிகள் குறைந்து 19,122.15 புள்ளிகளில் முடிந்தது.

டாடா ஸ்டீல், மாருதி, எம் & எம், பவர் கிரிட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

சன் பார்மா, விப்ரோ, ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com