47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இறக்கத்துடன் முடிந்த பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று இறக்கத்துடன் முடிந்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :31 அக்டோபர் 2023, 11:29 am

DIN

பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று இறக்கத்துடன் முடிந்துள்ளது. 

நேற்று(திங்கள்கிழமை) 64,112.65 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 64,449.65 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 237.72 புள்ளிகள் குறைந்து 63,874.93 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 61.30 புள்ளிகள் குறைந்து 19,079.60 புள்ளிகளில் முடிந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, பவர் கிரிட், விப்ரோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எல்&டி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

பாரதி ஏர்டெல், ஐடிசி, டாடா ஸ்டீல், எம் & எம், சன் பார்மா, டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று சரிவைச் சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.