
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தன.
இதில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இதுவரை இல்லாத அளவுக்கு 20,000 புள்ளிகள் வரை உயர்ந்தது.
உலகளாவிய முதலீடுகள் மற்றும் ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதன் காரணமாக இந்திய வணிகத்தில் ஏற்றம் காணப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 528.17 புள்ளிகள் உயர்ந்து 67,127.08 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இது 0.79 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176.40 புள்ளிகள் உயர்ந்து 19,996 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது 0.89 சதவிகிதம் உயர்வாகும்.
இந்திய வணிகத்தில் மாலை 3.30 மணியளவில் நிஃப்டி புள்ளிகள் 185 புள்ளிகள் உயர்ந்து 20,005.40 என்ற உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் சென்சென்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து 67,156ஆக உயர்ந்தது.
கடந்த ஜூலை மாதம் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி ஏறுமுகத்தில் இருந்தது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஒப்பிடுகையில், தற்போது ஏற்பட்டுள்ள உச்சம் 15 சதவிகிதம் உயர்வாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.