பங்குச் சந்தை மதிப்பு ரூ.5.60 லட்சம் கோடி வீழ்ச்சி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.


மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 94 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.5.60 லட்சம் கோடி குறைந்தது. சந்தை தொடர்ந்து 8}ஆவது நாளாக உயர்ந்துள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சிறிது மேலே சென்றது. ஆனால், உச்சத்தில் லாபப் பதிவு இருந்ததால் சந்தை தள்ளாட்டம் கண்டது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை பிற்பகலில் இழக்க நேரிட்டது. பெரும்பாலான நேரம் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. இறுதியில் நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.5.60 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.318.67 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.1,473.09 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சிறிதளவு முன்னேற்றம்: காலையில் 379.09 புள்ளிகள் கூடுதலுடன் 67,506.88}இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 67,539.10 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 66,948.18 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில்
94.05 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 67,221.13}இல் முடிவடைந்தது.
15 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 217 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 1,860 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 30 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 3 புள்ளிகள் இழப்பு
தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 113.80 புள்ளிகள் கூடுதலுடன் 20,110.150}இல் தொடங்கி 20,110.35 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.
பின்னர், 19,914.65 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 3.15 புள்ளிகளை (0.02 சதவீதம்) இழந்து 19,993.20}இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டிசிஎஸ் 2.91%
எல் அண்ட் டி 1.68%
இன்ஃபோசிஸ் 1.66%
அல்ட்ராடெக் சிமென்ட் 139%
ஐசிஐசிஐ வங்கி 1.28%
நெஸ்லே 0.94%
சரிவைக் கண்ட பங்குகள்
பவர்கிரிட் 3.48%
என்டிபிசி 3.31%
டாடா மோட்டார்ஸ் 2.19%
டாடா ஸ்டீல் 1.68%
எம் அண்ட் எம் 1.55%
ரிலையன்ஸ் 1.47%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...