தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை ரூ.1,200 உயர்ந்து விற்பனையானது!

வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.58,700 ஆக வர்த்தகமானது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

News image

தங்கம்

Updated On :29 செப்டம்பர் 2023, 11:31 am

DIN

புதுதில்லி: வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.58,700 ஆக வர்த்தகமானது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

முந்தைய வர்த்தகத்தில் 10 கிராமுக்கு ரூ.58,950 ஆக இருந்தது. அதே வேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.74,300-க்கு விற்பனையானது.

தில்லியில் ஸ்பாட் தங்கத்தின் விலை மார்ச் 19க்குப் பிறகு மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் கமாடிட்டிகளின் மூத்த பகுப்பாய்வாளர் சவுமில் காந்தி தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,871 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 23.05 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு அதிகமாகவே இருக்கும் என்ற சமிக்ஞைக்குப் பிறகு, வாரத்தின் தொடக்கத்திலிருந்து தங்கம் குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.