இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!
பங்குச்சந்தைகள் இன்று இறக்கத்துடன் தொடங்கியுள்ளன.
வாரத்தின் முதல் நாளான நேற்று(திங்கள்கிழமை) 59,910.75 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடக்கத்திலேயே இறக்கம் கண்டது.
இன்று காலை 11.50 மணி நிலவரப்படி, 158.22 புள்ளிகள் குறைந்து 59,752.53 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 43.95 புள்ளிகள் குறைந்து 17,662.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆர்ஐஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி லைப், ஹெச்சிஎல் டெக், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ள நிலையில், சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தன.