
கோப்புப் படம்
பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் ஏறுமுகத்துடனும் நிஃப்டி இறங்கு முகத்துடனும் நிறைவடைந்தது.
மத்திய பட்ஜெட் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றும் ஏற்ற இறக்கத்துடனேயே இந்திய பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.16 புள்ளிகள் உயர்ந்து 59,932.24 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.38 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.90 புள்ளிகள் சரிந்து 17,610.40 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.033 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 17 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடம் முடிவடைந்தன. எஞ்சிய 13 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவு பெற்றன.
அதிகபட்சமாக ஐடிசி நிறுவன பங்குகள் 4.74 சதவிகிதமும், இந்தஸ்இந்த் வங்கி 3.25 சதவிகிதமும், என்யுஎல் 2.46 சதவிகிதமும், இன்ஃபோசிஸ் 2.18 சதவிகிதமும், விப்ரோ 1.63 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.
அதேபோன்று என்டிபிசி நிறுவன பங்குகள் 1.97 சதவிகிதம் அதிக அளவில் சரிவைக் கண்டது. அதற்கு அடுத்தபடியாக எட்சிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன.