
கோப்புப் படம்
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை 59,900.37 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது.
இன்று காலை 11.42 மணி நிலவரப்படி, 939.94 புள்ளிகள் அதிகரித்து 60,840.31 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 263.80 புள்ளிகள் உயர்ந்து 18,123.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆர்ஐஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | பொங்கல் தொகுப்புத் திட்டம்: தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்