

சென்செக்ஸ் 66,500 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,700 புள்ளிகளைக் கடந்தும் இன்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன.
வாரத்தின் தொடக்க நாளான(திங்கள்) இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவடைந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை 66,060.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 66,148.18 என்ற புள்ளிகளில் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில், 529.03 புள்ளிகள் அதிகரித்து 66,589.93 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகிறது. அதிகபட்சமாக 66,656.21 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 146.95 புள்ளிகள் உயர்ந்து 19,711.45 புள்ளிகளில் நிறைவுற்றது.
இன்று எஸ்பிஐ, விப்ரோ, டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுஸுகி, கிராசிம், அதானி எண்டர்பிரைசஸ், அப்போலோ மருத்துவமனை உள்ளிட்டவற்றின் பங்குகள் உயர்ந்தன.
ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், டைட்டன், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எம்&எம், ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஆட்டோ, டிவிஸ் லேப், எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
கடந்த வாரம் சென்செக்ஸ் முதல்முறையாக 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில் இன்று மேலும் உச்சத்தை எட்டியுள்ளது.
இதையும் படிக்க | பெங்களூருவில் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.