

சென்செக்ஸ் 67,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,800 புள்ளிகளைக் கடந்தும் இன்றும் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாள்களாக ஏற்றம் கண்டு வருவதுடன் புதிய வரலாற்று சாதனை படைத்து வருகின்றன.
அந்தவகையில் இன்று(புதன்) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவு பெற்றுள்ளன.
நேற்று (செவ்வாய்கிழமை) 66,795.14 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்) காலை 66,905.01 என்ற புள்ளிகளில் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில், 302.30 புள்ளிகள் அதிகரித்து 67,097.44 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. சென்செக்ஸ் நேற்று 66,500 புள்ளிகளைக் கடந்த நிலையில் இன்று 67,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 83.90 புள்ளிகள் உயர்ந்து 19,833 புள்ளிகளில் நிறைவுற்றது. முதல்முறையாக நிஃப்டி 19,800 புள்ளிகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
என்டிபிசி, பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் இன்று உயர்ந்தன.
ஏசியன் பெயிண்ட், ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.