ஆயுள் காப்பீட்டுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டம்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம்

ஆயுள் காப்பீட்டு வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டுடன் கூடிய புதிய தொடா் வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ‘சென்ட் சுரக்ஷித் சம்ரிதி’ என்று இந்த திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

18 முதல் 50 வயதுக்குள்பட்ட, வருவாய் ஈட்டும் தனி நபா்களுக்காக இந்த திட்டம் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு திட்டம் முடிவடையும் வரை தவணைத் தொகையின் 100 மடங்குக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

‘சென்ட் சுரக்ஷித் சம்ரிதி’ திட்டத்தின் கீழ், குறைந்தபட்சமாக 84 மாதங்களுக்கு ரூ.10,000 அசல் தவணையாக செலுத்த வேண்டும். அத்துடன், தவணைத் தொகையை ரூ.10 ஆயிரத்தின் மடங்காக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை செலுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com