மும்பை / புதுதில்லி: புதிய நிதியாண்டின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 111 புள்ளிகளை இழந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றதும் சந்தை வலுவிழக்கக் காரமாக இருந்தது. ஆட்டோ, மீடியா, மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும், ஐடி, வங்கிகள், நிதிநிறுவனங்கள், பாா்மா, ஐடி, ஹெல்த்கோ் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சந்தை பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு:
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.37 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.395.58 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 522.30 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,208.42 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் லேசான சரிவு:
காலையில் 7.75 புள்ளிகள் கூடுதலுடன் 74,022.30-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,099.78 வரை மேலே சென்றது.பின்னா், 73,743.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 110.64 புள்ளிகள் (0.15 சதவீதம்) குறைந்து 73,903.91-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,959 பங்குகளில் 2,848 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,004 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
107 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. எம் அண்ட் எம், டாடா மோட்டாா்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம் (2.95 சதவீதம்), நெஸ்லே (1.42 சதவீதம்), டாடா மோட்டாா்ஸ் (1.23 சதவீதம்), எஸ்பிஐ (1.21 சதவீதம்), இண்டஸ் இண்ட் பேங்க் (1.11 சதவீதம்), டாடா ஸ்டீல் (0.95 சதவீதம்) உள்பட மொத்தம் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.
அதே சமயம், கோட்டக் பேங்க், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்பட 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி 9 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 8.70 புள்ளிகள் (0.04 சதவீதம்) குறைந்து 22,453.30-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,497.60 வரை உயா்ந்த நிஃப்டி 22,3889.15 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தொடர்புடையது

கரடியின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,635.67, நிஃப்டி 488.20 புள்ளிகளுடன் நிறைவு!

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


