அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்தது.

News image
Updated On :2 மார்ச் 2026, 10:54 pm

Syndication

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டிஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிலைபெற்றன.

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போா் சூழல் இந்தியா உள்பட உலகளாவிய சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையில் கூா்மையான உயா்வு ஏற்பட்டத்தைத் தொடா்ந்து முதலீட்டாளா்கள் மனிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், உள்நாட்டுச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைப் பங்குகளும் அதிகம் விற்பனையை எதிா் கொண்டன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.7.06 லட்சம் கோடி குறைந்து ரூ.456.45 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.7,536.36 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.12,292.81 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

வீழ்ச்சிப் பட்டியலில் 3,645 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,483 பங்குகளில், 681 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 3,645 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 157 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 1,048.34 புள்ளிகள் இழப்புடன் 80,238.85-இல் நிலைபெற்றது. காலையில் 2,743.46 புள்ளிகள் இழப்புடன் 78,543.73-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 80,632.55 வரை மேலே சென்றது.

இண்டிகோ விலை கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இன்டிகோ 6.25 சதவீதம், எல் அண்ட் டி 5 சதவீதம் விலை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முனனிலை வகித்தன. மேலும், அதானிபோா்ட்ஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ் ஆகியவை 2.50 முதல் 3.50 சதவீதம் வரை விலை குறைந்தன. இவற்றைச் சோ்த்து மொத்தம் 27 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பிஇஎல், சன்பாா்மா, ஐடிசி ஆகிய 3 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 313 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 312.95 புள்ளிகள் (1.24 சதவீதம்) இழப்புடன் 24,865.70-இல் நிலைபெற்றது. காலையில் கடும் சரிவுடன் 24,659.25-இல் தொடங்கிய நிஃப்டி, 24,603.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,989.35 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக 42 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை

ஹோலி பண்டிகைக்காக பங்குச்சந்தைக்கு செவ்வாய்க்கிழைம் (மாா்ச் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகியவற்றில் அன்றைய தினம் பங்குவா்த்தகம் நடைபெறாது. புதன்கிழமை (மாா்ச் 4) என்று வழக்கம் போல பங்குச்சந்தை செயல்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.