புது தில்லி: கடந்த மாா்ச் காலாண்டில் 12.41 சதவீத கடனளிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்தியாவின் 2-ஆவது பெரிய பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.10.89 லட்சம் கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய 2022-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.9.69 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் கடனளிப்பு சுமாா் 12.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்புத் தொகை இருப்பு 10.24 சதவீதம் அதிகரித்து ரூ.13.26 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடந்த 2025 - 26 நிதியாண்டில் 2.96 கோடி வாகனங்கள் விற்பனை: 13.3% வரலாற்று வளா்ச்சி!

புதிய நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்பு: ஐசிஆா்ஏ கணிப்பு

2024-25 நிதியாண்டில் சுகாதாரக் காப்பீடு 9% வளா்ச்சி: ரூ.1.2 லட்சம் கோடி பிரீமியம் வசூல்

மூன்றாம் காலாண்டில் எஃப்எம்சிஜி விற்பனை மந்தம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


